அதை உருவாக்குவோம்
1
சாதாரணமான அளவுள்ள பாத்திரம் ஒன்றில் தேங்காய்த்துருவலையும் MILKMAID ஐயும் கலந்து , பிசுபிசுப்பான கனமான பேஸ்ட் ஒன்றை தயாரித்துக்கொள்ளுங்கள் .
2
அந்த பேஸ்ட்டில் இருந்து ஒரே அளவிலான நீள்சதுர வடிவங்களை தயாரித்துக்கொண்டு, அந்த வடிவங்களில் மாற்றம் ஏற்படாது கவனித்துக்கொள்ளுங்கள் .
3
நீள் சதுரத்துண்டங்களை,பாச்மன்ட் கடதாசியினால் மூடி பேக்கிங் சீட் ஒன்றின் மீது வைத்து குளிரூட்டியின் உறை நிலையில் சுமார் 20 நிமிடங்கள் வையுங்கள்.
4
அதற்கிடையில் சொக்லட்டை துண்டுகளாக கரைத்துக்கொள்ளுங்கள் .கரைப்பதற்கு சொக்லட்டை வெப்பம் தாங்கும் பாத்திரமொன்றில் இட்டு அதனை நீருள்ள கடாய் ஒன்றில் வையுங்கள்.இப்போது கடாயை குறைந்த வெப்பத்தில் சூடாக்குங்கள் .பாத்திரத்தில் இருக்கும் சொக்லட் கரையும் வரை கரண்டியால் கிளறி விடவும்.குறிப்பாக பாத்திரத்தில் நீர் உட்புக இடமளிக்காதீர்கள் .
5
ப்ரீசரில் இருக்கும் நீள்சதுரத்துண்டுகளை வெளியில் முள்ளுக்கரண்டியின் உதவியுடன் ,கரைத்துக்கொண்ட சொக்லடில் இட்டு ஒவ்வொரு பக்கத்திலும் சொக்கொலேட்டை தடவிக்கொள்ளுங்கள்.
6
இப்போது நீங்கள் வீட்டிலே தயாரித்துக்கொண்ட சொக்லட் கோகனட் பார்களை பேக்கிங் சீட் ஒன்றில் பரப்பி சில மணிநேரங்கள் குளிரூட்டியில் வைத்த பின்னர் பரிமாறுங்கள்.