அதை உருவாக்குவோம்
முட்டைகளை மெதுவாக அடிக்கவும். நீருடன் MILKMAID ஐக் கலந்து, முட்டைகளுடன் சேர்க்கவும். மற்றும் வெனிலா எசன்ஸ் சேர்க்கவும்.
பாண் துண்டுகளிலிருந்து முறுகலான பகுதிகளை நீக்கவும். ஒவ்வொரு பாண் துண்டுகளையும் அரைவாசியாக வெட்டவும். முட்டைக் கலவைக்குள் பாண் துண்டுகளை அமிழ்த்தவும்.
பாணை ஒரு தட்டில் வைக்கவும். ஒவ்வொரு பக்கமும் பொன்னிறமாக வரும் வரை ஏறக்குறைய 4 நிமிடங்களுக்கு நடுத்தரமானளவு வெப்பத்தில் சமைக்கவும்.
பிரெஞ் றோஸ்டை பட்டர், MILKMAID அல்லது தேனுடன் பரிமாறவும்
ஊட்டச்சத்து உண்மைகள்
ஆரோக்கியமான, சமமான உணவுப் பழக்கத்திற்கு அத்தியாவசியமான பல உயிர்ச்சத்துக்கள் மற்றும் தாதுப்பொருட்களை முட்டை கொண்டிருக்கின்றது. புரோட்டினுக்கான சிறந்த மூலமாகவும் அவை விளங்குகின்றன.