அதை உருவாக்குவோம்
மாவையும் ரவையையும் ஒரு பாத்திரத்திலிட்டு கலக்கவும். பட்டரையும் நெய்யையும் சேர்த்து சகல சேர்மானங்களும் சேர்ந்து ஒரு மாக்கலவையாக உருவாகும் வகையில் கைகளால் கலவையை பிசையவும்.
றோஸ் வோட்டருடன் நீரைக் கலக்கவும். கைககளால் தொடர்ச்சியாக கலக்கும் போது இதனை மாக்கலவை மீது தெளிக்கவும். ஒரு மணித்தியாலத்திற்கு குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் பேரீச்சம்பழத்தையும் பட்டரையும் இட்டு கலக்கவும். தொடர்ச்சியாக கலக்கியவாறு MILKMAIDஐ படிப்படியாக சேர்க்கவும். அத்துடன் நெட்மெக் ஆமண்ட் மற்றும் எள்ளைச் சேர்க்கவும். பசை மென்மையானதாக வரும் வரை சகல சேர்மானங்களையும் கலக்கவும்.
திரும்பவும் மாக்கலவையை பிசைந்த பின் அதனை இரண்டு சமபாகங்களாக பிரிக்கவும்.
25×30cm அவணை பட்டரால் சுத்தம் செய்யவும்.
முதலாவது மாக்கலவையை உருட்டி (3mm தடிப்பு) தட்டின் அடிப்பகுதியில் வைக்கவும்.
பேரீச்சம்பழ பேஸ்றை 1செ.மீ தடிப்பத்தில் உருட்டி, மாக்கலவை மீது வைக்கவும்.
மிகுதியான மாக்கலவையை உருட்டி, மூடி வைக்கவும்.
முன்னமே 190°c அளவிற்கு வெப்பமூட்டப்பட்ட அவணில் 20-25 நிமிடத்திற்கு அல்லது மெல்லிய பிறவுண் நிறம் வரும் வரை பேக் செய்யவும்.
ஆறியதும் விருப்பம் போல சிறிய துண்டுகளாக வெட்டவும்.
ஊட்டச்சத்து உண்மைகள்
பேரிச்சம் பழத்தில் நார்ச்சத்து உணவு அதிகமுள்ளதுடன், உங்கள் நோயெதிர்ப்பு சக்திக்கு அத்தியாவசியமான ஒட்சிசனேற்ற அம்சங்களையும் உள்ளடக்கியிருக்கின்றது.