அதை உருவாக்குவோம்
1
சீனி ஐஸிங் சுகர் மற்றும் உப்பைக் கலக்கவும். பட்டரையும் சேர்த்து கிறீமாக வரும் வரை அடிக்கவும்.
2
MILKMAID மற்றும் வனிலாவைச் சேர்த்து நன்றாக அடிக்கவும். பின் மாவைச் சேர்த்து கலக்கவும்.
3
மாக்கலவையை 2 பகுதிகளாகப் பிhpக்கவும். ஒரு பகுதியை ஒரு புறமாக வைக்கவும். மற்றப் பகுதியை 6 துண்டுகளாகப் பிரிக்கவும். ஒவ்வொரு துண்டையும் றெயின்போ கலரினால் நிறமூட்டவும். நிறமூட்டப்பட்ட, நிறமூட்டப்படாத மாக்கலவையை 1 மணித்தியாலத்திற்கு குளிரூட்டியில் வைக்கவும்.
4
நிறமூட்டப்படாத மாக்கலவையை மா பூசப்பட்ட இரண்டு பேக்கிங் பேப்பர் சீற்றுக்குள் வைத்து அமுக்கவும். செவ்வகமாக வரும்வரை உருட்டவும். ஒவ்வொரு நிறமூட்டப்பட்ட மாக்கலவைப் பாகத்தையும் சொசேஜ் வடிவம் வரும் வரை உருட்டவும். இன்னொரு மா பூசப்பட்ட பேக்கிங் பேப்பர் சீற்றில் வாpசையாக வைக்கவும். மெதுவாக ஒன்று சேர்த்து அழுத்திய பின் இன்னொரு மா பூசிய பேக்கிங் பேப்பர் சீற்றை மேலே வைக்கவும். செவ்வகமாக வடிவம் வரும் வரை உருட்டவும்.
5
மேலே இருக்கும் பேக்கிங் பேப்பர் சீற்றை அகற்றவும். றெயின்போ மாக்கலவையை மேற்புறமாக நகர்த்தவும். விளிம்புகளை சமநிலைப்படுத்தவும். ஒரு சுருளுக்குள் மாக்கலவையை விட்டு உருட்டவும். பிளாஸ்ரிக் உறையினுள் மாக்கலவையை விட்டு உருட்டவும். ஒரு மணித்தியாலத்திற்கு குளிரூட்டியில் வைக்கவும்.
6
சீனியின் மீது மாக்கலவையை உருட்டவும்.
7
¼ அங். தடிப்பத்தில் மாக்கலவையை துண்டுகளாக வெட்டவும். பேக்கிங் பேப்பர் மீது வைக்கவும்.
8
அவணை முன்னதாகவே சூடாக்கவும். 160°c வெப்பத்தில் 15 - 20 நிமிடங்களுக்கு பேக் செய்யவும். பிஸ்கட்களை 10 நிமிடங்களுக்கு ஆற விடவும்.