அதை உருவாக்குவோம்
ஒரு பாத்திரத்தில் முட்டை வெள்ளைக் கருவை இறுக்கமாக வரும் வரை அடிக்கவும். சீனியையும் சேர்த்து படிப்படியாக அடிக்கவும்.
மஞ்சட் கருவை ஒரு தடவைக்கு ஒன்றாக சேர்க்கவும். மாவையும் பேக்கிங் பவுடரையும் அரிக்கவும். கலவையுடன் சேர்க்கவும். நன்றாக கிறீமாக்கவும்.
7அங். சதுரமான தட்டில் ஊற்றி 180°c வெப்பத்தில் 20 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்.
பக்கெட்டிலுள்ள அறிவுறுத்தல்களுக்கேற்ப ஜெலியைத் தயாரித்து உறைய விடவும்.
ஸ்பொஞ்ச் கேக்கை சிறுசிறு துண்டுகளாக வெட்டவும். பரிமாறும் தட்டிலுள்ள கிளாசின் அடிப்பாகத்தில் வைக்கவும்.
MILKMAID மற்றும் பிரெஷ் கிறீமை ஒன்றாகச் சேர்க்கவும். ஸ்பொஞ்ஜ் கேக்கின் மேற்பகுதியில் ஊற்றவும். கேக்கின் மேற்பகுதியில் நறுக்கப்பட்ட பழங்களை இடவும்.
தயாரான ஜெலியை சிறு பகுதிகளாக வெட்டி பழங்களின் மேல் இடவும். மேலே விப்ட் கிறீமை இட்டு (விரும்பினால்) குளிராக பரிமாறவும்.