அதை உருவாக்குவோம்
1
ஒரு பாத்திரத்தில் மா, ஈஸ்ட் மற்றும் சீனியைச் சேர்க்கவும். மா நன்றாக கலக்கும் வரை படிப்படியாக நீரைச் சேர்க்கவும்.
2
இறுதியாக ஒலிவ் ஒயிலைச் சேர்த்து மாக்கலவையைப் பிசையவும். மாக்கலவை இரு மடங்கு ஆகும் வரை தனியாக வைக்கவும்.
வட்டவடிவமாக வரும் வரை உருட்டவும். (8 அங். விட்டம்)
3
ஒரு சோஸ்பானில் பட்டரையும், MILKMAIDஐயும் தொடர்ந்து கரண்டியால் நன்றாக கலந்து சூடாக்கவும்.
கொதித்ததும் அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும். இக்கலவையை பீசா பேஸ் மீது பரப்பவும்.
4
நறுக்கப்பட்ட கஜு மற்றும் உலர்ந்த திராட்சையை பீசா மேலே தூவவும். பொன்னிறமாக மாறும் வரை 180°c வெப்பத்தில் 15 நிமிடங்களுக்கு அல்லது மேற்புறம் மெல்லிய பிறவுண் நிறமாக மாறும் வரை பேக் செய்யவும்.
சூடாகப் பரிமாறவும். மேற்புறத்தை பாதாமால் அலங்கரிக்கவும்.