அதை உருவாக்குவோம்
1
ஒரு பாத்திரத்திலிட்டு வாழைப்பழங்களை மசித்தெடுக்கவும்
2
வேறொரு பாத்திரத்தில் பட்டர், மில்க்மெயிட், சீனி, முட்டை மற்றும் வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்.
3
கலவை ஒன்றாகும் வரை அடித்தெடுக்கவும்
4
வேறொரு பாத்திரத்தில் மா, கறுவா தூள், பேக்கிங்க் சோடா மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.
5
வாழைப்பழ கலவையை சேர்த்து ஒன்றாகும் வரை கலக்கவும்.
6
சாக்லெட் துண்டுகளை சேர்த்து கிளறவும்.
7
கலவையை பாண் தட்டில் இடவும்.
8 (தேவையேற்படின்)
மீதமிருக்கும் சாக்லெட் துண்டுகளை மேலே தூவி விடவும்.
9
180 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 50 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்.