அதை உருவாக்குவோம்
1
இரண்டு தனியான கோப்பைகளில் சிவப்பு நிற மற்றும் பச்சை நிற ஜெலிகளைச் செய்யவும். முழுமையாக செட் ஆகும் வரை இரண்டு கோப்பைகளையும் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்
2
ஜெலி நன்கு செட் ஆகியதும் பாரிய கட்டிகளாக சிவப்பு மற்றும் பச்சை ஜெலிகளை வெட்டவும். தனியாக வைக்கவும்.
3
ஐந்து நிமிடங்களுக்கு பாரிய கோப்பை ஒன்றில் ½ கோப்பை குளிர் நீரில் ஜெலட்டினை நனைக்கவும். 1 ½ கோப்பை கொதி நீரை சேர்த்து நன்கு கலக்கவும். மில்க்மெய்ட்டினை கலந்து முழுமையாக சேரும் வரை கலக்கவும். சிறிது குளிரச் செய்யவும்.
4
7’’× 4’’ அளவு தட்டில் இட்டு பிளாஸ்டிக்கால் மூடவும். பாதியளவு ஜெலி கட்டிகளை வைக்கவும். ஜெலி கட்டிகள் மறையும் வரை போதியளவு மில்க்மெய்ட் கலவையை மேலே இடவும். மில்க்மெய்ட் சிறிதளவு செட் ஆகும் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.
5
எஞ்சியுள்ள ஜெலி கட்டிகளை மேற்பகுதியில் வைக்கவும். மேற்பகுதிக்கு அருகில் வரும் வரை மில்க்மெய்ட் கலவையால் மூடவும்.
6
முழுமையாக செட் ஆகும் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.