அதை உருவாக்குவோம்
1
சூக் பேஸ்ரி தயாரிப்பதற்கு: சோஸ்பானொன்றில் நீரையும் பட்டரையும் சேர்த்து பட்டர் உருகும் வரை கொதிக்கச் செய்யவும். வெப்பத்தைக் குறைத்து மாவினைக் கலக்கவும். கலவை தட்டின் பக்கங்களை விட்டு விலகி உருண்டைகளாக வரும் வரை நன்றாக அடிக்கவும். அடுப்பிலிருந்து இறக்கவும். 2-3 நிமிடங்கள் வரை ஆற வைக்கவும்.
2
முட்டைகளை குளிரான கலவையுடன் மெதுவாக சேர்க்கவும். வனிலா எசன்ஸ் மற்றும் உப்பினை இட்டு நன்றாகக் கலக்கவும்.
சிறிய கரண்டியால் பேஸ்ரியை எடுத்து பேக்கிங் தட்டில் வைக்கவும்.
3
அவணில் 180°C வெப்பத்தில் 30 நிமிடங்களுக்கு அல்லது பொன்னிறமாக வரும் வரை பேக் செய்யவும்.
சிறிதளவு பாலில் கோர்ண் பிளவரைக் கலக்கவும்.
4
சோஸ்பான் பாத்திரத்தில் MILKMAID மற்றும் எஞ்சியுள்ள பாலைக் கலக்கவும். பாலைச் சூடாக்கவும். கோர்ண் பிளவர் பேஸ்ட்டினையும் சேர்த்து, மெல்லிய தீச்சுவாலையில் சமைக்கவும். கஸ்டர்ட் தடிப்பாக வரும்வரை தொடர்ச்சியாக கலக்கவும்.
5
எஞ்சியுள்ள சேர்மானங்களையும் சேர்த்து அடிக்கடி கலக்கவும்.
பவ்பினைப் பிரித்து குளிரான கஸ்டர்டினால் உள்ளே நிரப்பவும்.
ஊட்டச்சத்து உண்மைகள்
சிறந்த உடற்செயற்பாட்டை பேணுவதற்கு முக்கியமான விட்டமின்கள், தாதுப்பொருட்கள், மற்றும் ஒட்சிசனேற்ற மூலங்கள் என்பன முந்திரியில் நிறைந்துள்ளன.