அதை உருவாக்குவோம்
1
MILKMAID, சீனி, முட்டைகள், தேங்காய்ப் பால்மா, பட்டர், வனிலா எசன்ஸ் மற்றும் ஒரு பிடி உப்புடன் ஒரு பெரிய பாத்திரத்தில் மாவைச் சேர்த்து அரிக்கவும். கலக்கும் வரை நன்றாக ஆட்டவும். பின் அறை வெப்பநிலையில் 30 நிமிடங்களுக்கு வைக்கவும்.
2
பான் கேக்குகளைச் சமைக்கத் தொடங்குவதற்கு முன் மாக்கலவையின் பதத்தைப் பரிசோதிக்கவும். கலவை அதிகம் தடிப்பாக இருந்தால் சிறிதளவு சுடுநீர் சேர்க்கவும்.
3
ஒட்டாத எண்ணெய் தட்டொன்றை மேலதிக உருகிய பட்டரால் பிரஸ் செய்யவும். நடுத்தர வெப்பத்தில் சூடாக்கவும். தட்டின் அடித்தளத்தில் பரவக்கூடியதாக போதுமான அளவு மாக்கலவையை ஊற்றவும். ஒவ்வொரு பக்கமும் பொன்னிறமாகும் வரை 1-2 நிமிடங்களுக்கு சமைக்கவும். ஒரு தட்டில் எடுத்து சூடாக்கவும். மிகுதியான கலவையையும் இவ்வாறு செய்து 12 பான் கேக்குகளைத் தயாரிக்கவும்.
4
பரிமாறுவதற்காக தட்டொன்றில் கிறீப் பேப்பரை முக்கோணமாக மடித்து வைக்கவும். வாழைப்பழத் துண்டுகளை மூடவும். சொக்லேற் சோஸ் மற்றும் கிறீமைத் தூவவும
ஊட்டச்சத்து உண்மைகள்
வாழைப்பழத்தில் அதிகளவு நார்ச்சத்து உள்ளதுடன், பொற்றாசியத்திற்கான சிறந்த மூலமாகவும் விளங்குகின்றது.