அதை உருவாக்குவோம்
1
இரண்டு பேக்கிங் தட்டுகளில் பேக்கிங் பேப்பர்களை இடவும். பட்டரையும், சீனியையும் கிறீமாக வரும் வரை அடிக்கவும்.
2
கறுவா MILKMAID மற்றும் முட்டைகளைச் சேர்த்து நன்றாக கலக்கவும். அரித்த மாவைவும் பேக்கிங் பவுடரையும் சேர்த்து மாக்கலவை இறுக்கமாக வரும் வரை கலக்கவும். பிளாஸ்டிக் நாடாவால் சுற்றி 10-15 நிமிடங்களுக்கு குளிரூட்டவும்.
3
மாக்கலவையை இரண்டு பகுதிகளாக வெட்டி 5mm தடிப்புள்ள பேக்கிங் சீற்றுக்கு நடுவில் வைத்து உருட்டவும். குக்கி கட்டரொன்றை உபயோகித்து ஜிஞ்சர்பிரெட் மென் அல்லது பல்வேறு வடிவங்களில் வெட்டவும். மீதமாயிருக்கும் மாக்கலவையையும் இவ்வாறு செய்யவும்.
4
தட்டுகளில் பிஸ்கட்டுகளை வைத்து 12-15 நிமிடங்களுக்கு அல்லது பொன்னிறமாகும் வரை பேக் செய்யவும். 5 நிமிடங்களுக்கு தட்டில் ஆற வைத்த பின் வயர் றாக்கையில் குளிர விடவும்.
ஊட்டச்சத்து உண்மைகள்
பட்டரில் கொழுப்பு கரையக்கூடிய விட்டமின் K, A, D, E உள்ளதுடன் மற்றும் HDLஇனை அதிகரிக்கக் கூடிய (சிறந்த கொலஸ்ரோல்) நிறைவுற்ற கொழுப்பு அதிகளவில் உள்ளது.