அதை உருவாக்குவோம்
8 அங். விட்டமுடைய பேக்கிங் டின் மீது எண்ணெயைப் பூசிய பின் மாவைத் தூவவும். முற்கூட்டியே அவணை 180°C வரை சூடாக்கவும். மா, கொக்கோ பவுடர், பேக்கிங் பவுடர் மற்றும் அப்பச் சோடாவை சேர்த்து அரிக்கவும்.
இன்னொரு பாத்திரத்தில் பட்டரை மென்மையானதாக்கவும். (உருக்க வேண்டாம்). MILKMAID உடன் சேர்த்து நன்றாக அடிக்கவும். பின் வனிலா எசன்ஸைச் சேர்க்கவும்.
மாக்கலவையும் நீரையும் சேர்க்கவும்.
பேக்கிங் டின்னிற்குள் மாக்கலவையை ஊற்றவும். அவணை முன்கூட்டியே வெப்பமாக்கி, 45-50 நிமிடங்களுக்கு பேக் செய்யவும். அதன் பின் அவணிலிருந்து அகற்றி சிறிது நேரம் ஆற விடவும். கேக்கின் பக்கங்களை அவசியமானால் கத்தியொன்றை உபயோகித்து இலகுவாக்கவும். தட்டு ஒன்றிற்கு மாற்றி கிடையாக 2 துண்டுகளாக வெட்டுவதற்கு முன் சிறிது நேரம் ஆறவிடவும்.
செரிப் பழங்களைப் அழுத்திய பின் செரி சிரப்பில் இரண்டு கேக் துண்டுகளையும் அமிழ்த்தவும்.
விப்ட் கிறீம் மற்றும் சீனியை மென்மையாக வரும் வரை அடிக்கவும். விப்ட் கிறீம் மற்றும் பழங்களால் கேக்கின் இரண்டு துண்டுகளையூம் இணைத்து சாண்ட்விச் செய்யவும். விப்ட் கிறீம் மற்றும் செரீஸ் பழங்களை மேலே இடவும். துருவிய சொக்லேற்றை போதுமான அளவு தெளிக்கவும். ஆற வைத்து பரிமாறவும்.
ஊட்டச்சத்து உண்மைகள்
நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கான நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கு அத்தியாவசியமான சக்தி மிக்க antioxidants மூலங்களை செரி கொண்டிருக்கின்றது.