அதை உருவாக்குவோம்
அவணை முன்கூட்டியே 180°C அளவுக்கு சூடாக்கவும். 8 அங். விட்டமுள்ள கேக் டின் மீது எண்ணெய் பூசிய பின் மாவைத் தூவவும். சீனியை தட்டு ஒன்றில் இட்டு உருகி மண்ணிறமாகும் வரை சூடாக்கவும். கரமல் சிரப் செய்வதற்காக சுடுநீரைச் சேர்க்கவும். ஒரு புறமாக வைக்கவும். மா, பேக்கிங் பவுடர், அப்பச் சோடா, கறுவா மற்றும் நெட்மெக்கை ஒன்றாக சேர்த்து 2-3 முறை அரிக்கவும். 1 மே.க. மாவை பழங்கள் மீது பூசுவதற்காக பழத்துண்டுகள் மீது போடவும்.
ஒரு தட்டிலிட்டு பட்டரை மென்மையானதாக்கவும். MILKMAID ஐ சேர்க்கவும். அரித்த மாவுடன் MILKMAID பட்டர் கலவையை சேர்க்கவும். கரமல் சிரப்பை முழுவதும் பாவிக்கப்படும் வரை நீரையும் அவ்வப்போது சேர்க்கவும். வெட்டிய உலர் பழங்கள், றோஸ் மற்றும் ஆமண்ட் எசன்ஸை கலவையுடன் சேர்த்து கலக்கவும்.
எண்ணெய் பூசிய கேக் டின்னினுள் கலவையை ஊற்றவும். ஒரு மணித்தியாலத்திற்கு 180°C வெப்பத்தில் அல்லது கேக் வேகும் வரை பேக் செய்யவும். அவணிலிருந்து அகற்றி சிறிது நேரம் ஆற வைக்கவும். பக்கங்களை இலகுவாக்கி, ஒரு தட்டில் வைக்கவும். துண்டுகளாக வெட்டு முன், ஆற விடவும்.
ஊட்டச்சத்து உண்மைகள்
உலர்ந்த பழங்களில் காபோவைதரேற்று அதிகமாகவும், கொழுப்புச் சத்து குறைவாகவும் இருக்கும். நார்ச்சத்து, உயிர்ச்சத்துக்கள் மற்றும் தாதுப்பொருட்களுக்கான சிறந்த மூலமாக அவை உள்ளன.