அதை உருவாக்குவோம்
1
ஒரு பாத்திரத்தில் பிஸ்கட்டுகளை அழகாக உடைத்து போடவும். உருகிய பட்டரைச் சேர்த்து நன்றாக கலக்கவும். எண்ணெய் பூசிய ஆழம் குறைவான கிளாஸ் டிஷ் அல்லது தளர்ச்சியான அடித்தளமுள்ள பை டிஷ் ஒன்றில் கலவையை உட்செலுத்தவும். 15 நிமிடங்களுக்கு குளிரூட்டியில் வைத்திருக்கவும்.
2
தொங்கும் தயிரைப் பெற்றுக் கொள்வதற்காக தயிரை 10 நிமிடங்களுக்கு மஸ்லின் துணியில் வடிக்கவும்.
3
இன்னொரு பாத்திரத்தில் அன்னாசிப்பழ ஜுஸ் மீது ஜெலட்டினை விசிறவும். சுடுநீரைக் கொண்டிருக்கும் சோஸ்பான் ஒன்றில் இந்தப் பாத்திரத்தை வைக்கவும். ஜெலட்டின் கரையும் வரை கலக்கவும் .
4
தொங்கு தயிரையும், MILKMAIDஐயும் மென்மையாக வரும் வரை அடிக்கவும். பிழிந்த அன்னாசிப் பழங்களையும் கரைத்த ஜெலட்டினையும் சேர்க்கவும். நன்றாக கலக்கவும்.
5
கிறீமை மென்மையான நுரை வரும் வரை நன்றாக அடிக்கவும். தயிர்க் கலவையுடன் கலக்கவும். குளிர்ந்த பிஸ்கட் லேயருக்குள் ஊற்றவும். 1-2 மணித்தியாலங்களுக்கு அல்லது இறுகும் வரை குளிரூட்டியில் வைக்கவும்.
ஊட்டச்சத்து உண்மைகள்
விட்டமின் C, மற்றும் விட்டமின் B complex மற்றும் பொற்றாசியம் போன்ற ஏனைய அத்தியாவசிய உயிர்ச்சத்துக்கள் மற்றும் தாதுப்பொருள்கள் கொண்ட உணவாக அன்னாசி உள்ளது.