அதை உருவாக்குவோம்
சீனி, 2 லெமன்களின் தோல் மற்றும் சாறு, நீர், கொத்தமல்லி விதைகள் மற்றும் 1 சிறிய கறுவாப்பட்டை என்பவற்றைச் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
1
சிறிதளவு சூடான பாலைக் கலந்து ஈஸ்ட்டைக் கிறீமாக்கவும்.
2
மாவை ஒரு பாத்திரத்திலிட்டு சூடாக்கவும். நடுவில் ஒரு துளையைச் செய்து ஈஸ்ட் கலவையைச் சேர்க்கவும். சிறிதளவு மாவைப் பக்கங்களிலிருந்து தூவவும். துணியொன்றினால் மூடி, சூடான இடமொன்றில் வைக்கவும்.
3
மிகுதியாக இருக்கும் சூடான பால் கலவை, கரண்ற்ஸ், உப்பு மற்றும் முட்டைகளைச் சேர்க்கவும். மாக்கலவை மென்மையானதாக வரும்வரை பிசையவும். பட்டரை சிறிய துண்டுகளாகச் சேர்த்து, துணியொன்றினால் மூடி சூடான இடமொன்றில் பொங்கும் வரை வைக்கவும்.
4
எண்ணெய் பூசிய அச்சில் மாக்கலவையை நிரப்பி, சிறிது நேரம் வைக்கவு]ம்.
5
20 நிமிடங்களுக்கு 220°c வெப்பமுடைய அவணில் பேக் செய்யவும். சமைத்த பின், சிறிதளவு ஆற விடவும்.
6
சூடான சிரப்பினுள் அமிழ்த்தவும். றம் பானத்தை தாராளமாக விசிறவும். அழகான பழங்களால் அலங்கரிக்கவும்.
ஊட்டச்சத்து உண்மைகள்
கறுப்பு திராட்சைகள், உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க அத்தியாவசியமான விட்டமின்கள், தாதுப்பொருட்கள் மற்றும் antioxidants மூலங்கள் நிறைந்ததாகும்.