அதை உருவாக்குவோம்
ஒரு சோஸ்பானில் கோர்ண் ஸ்ராச்ஜ்சையிட்டு நீரில் கரைக்கவும். MILKMAID மற்றும் முட்டை மஞ்சட் கருவை சேர்க்கவும். தடிப்பாகி, குமிழ்கள் தோன்றும் வரை கலக்கவும். அடுப்பிலிருந்து இறக்கவும். பட்டரையும் வனிலா எசன்சையும் சேர்க்கவும். ஓரளவு ஆற வைத்து தேங்காயுடன் கலக்கவும்.
சுகர் பேஸ்ற் மூலம் பை அச்சை பூசவும். (சுகர் பேஸ்ற் சேர்மானங்களைக் கலக்கவும். 30 நிமிடங்களுக்கு குளிரூட்டவும்) துளைகளைக் கிண்டவும். 160°c வெப்பத்தில் 8-10 நிமிடங்களுக்கு அவணில் பேக் செய்யவும். (பொன்னிறமாக வரும் வரை) ஆற விடவும். அச்சிலிருந்து அகற்றவும். உருகிய குக்கிங் சொக்லேற்றை உட்புறமாக பூசவும். சிறிதளவு உலர விடவும்.
வாழைப்பழத்தை சிறுதுண்டுகளாக வெட்டவும். லெமன் ஜுஸில் அமிழ்த்தவும். வடித்த பின் பை செல்லுக்கு ஒரு தளத்தை ஒழுங்குபடுத்தவும். MILKMAID மிக்சரை ஊற்றவும். இறுகும் வரை குளிர வைக்கவும். தயாரிக்கப்பட்ட மெரிங்கை மேற்புறத்தில் வைக்கவும். (முட்டை வெண் கருவுடன் சீனியை இறுக்கமாக வரும் வரை அடிக்கவும்) 150°c -170°c அளவு சூடான அவணில் 5-6 நிமிடங்களுக்கு ஒரு ஸ்டார் நொசில் பைப் மெரங்குவை உபயோகிக்கவும்). விரும்பினால் உலர்ந்த தேங்காய் மற்றும் வாழைப்பழத் துண்டுகளால் அலங்கரிக்கவும்.
ஊட்டச்சத்து உண்மைகள்
வாழைப்பழத்தில் அதிகளவு நார்ச்சத்து உள்ளதுடன், பொற்றாசியத்திற்கான சிறந்த மூலமாகவும் விளங்குகின்றது.