அதை உருவாக்குவோம்
1
அவணை 175°c அளவுக்கு முன்கூட்டியே வெப்பமாக்கவும். பட்டருடன் கிறக்கர் கிரம்ஸ், சீனி மற்றும் உப்பை ஒரு பாத்திரத்தில் இட்டு கலக்கவும். தயாராகவுள்ள தட்டின் அடித்தளத்திலும், பக்கங்களிலும் கலவையை அழுத்தவும். பொன்னிறமாக வரும் வரை (15 நிமிடங்களுக்கு) பேக் செய்யவும். தட்டொன்றின் மீது வைத்து முற்றிலும் குளிரூட்டவும்.
2
அவக்காடோவை ஒரு பாத்திரத்தில் வெட்டி போடவும். கிறீம் சீசை சேர்க்கவும். மென்மையாக வரும் வரை மிக்ஸ்ர் ஒன்றில் இட்டு நடுத்தர வேகத்தில் அடிக்கவும்.
3
MILKMAID, லெமன் ஜுஸ் மற்றும் உப்பை சேர்க்கவும். மென்மையாக வரும் வரை அடிக்கவும். ஜெலட்டினையும் சேர்த்து நன்றாக கலக்கவும். கிறஸ்டிற்குள் பில்லிங்கை ஊற்றவும். மேற்புறத்தை மூடவும். குறைந்தது 4 மணித்தியாலங்களுக்கு குளிரூட்டவும்.
4
விப்ட் கிறீமினால் (விரும்பினால்) அலங்கரித்து உடனே பரிமாறவும்.