அதை உருவாக்குவோம்
1
அவணை 180°C அளவிற்கு முன்கூட்டியே வெப்பமாக்கவும்.
2
பாண் தூளுடன் கலவை நன்றாகக் கலக்கும் வரை மா, ஐசிங் சுகர் மற்றும் பட்டரை நன்றாகக் கலக்கவும். முட்டையைச் சேர்க்கவும். கலவை ஒட்டாத நிலைக்கு வரும் வரை நன்றாகக் கலக்கவும். 30 நிமிடங்களுக்கு மூடி குளிரூட்டவும்.
3
8 அங். விட்டமுடைய பை டின் மீது எண்ணெயைப் பூசவும். பேஸ்ட்ரியை உருட்டவும். தயாரான டின்னினுள் பேஸ்ட்ரியை வரிசைப்படுத்தவும். பக்கங்களையும், அடித்தளத்தையும் அழுத்தவும். மிகுதியைச் சமநிலைப்படுத்தவும். அடிப்பாகம் முழுவதையும் ஒரு முள்ளுக் கரண்டியால் குத்தவும். 10-15 நிமிடங்களுக்கு 180°c வெப்பத்தில் பேக் செய்யவும். பின் ஆற விடவும்.
4
MILKMAID மற்றும் நீரை நன்கு சேரும் வரை நன்றாக கலக்கவும். பெரிய பாத்திரமொன்றில் கோர்ண் பிளவர், முட்டை மஞ்சள் கரு மற்றும் வனிலா எசன்ஸை இட்டு கலக்கவும். கலக்கும் போது, கஸ்டர்ட் மிக்சருக்குள் MILKMAID கலவையை மெதுவாக ஊற்றவும். இக்கலவையை சோஸ்பான் ஒன்றுக்குள் ஊற்றி, நடுத்தர வெப்பத்தில் சமைக்கவும். தடிப்பமாக வரும் வரை தொடர்ந்து கலக்கவும்.
5
விப்ட் கிறீமைக் கலந்த பின், தயாராக இருக்கும் பேசினுக்குள் ஊற்றவும்.
6
பழங்களால் மேற்புற டார்ட்டை நிரப்பவும்.
ஊட்டச்சத்து உண்மைகள்
Milkmaid புருட் பிளான் என்பது சக்தி மிக்க உணவுப் பழக்கமாகும். உள்ளெடுக்கும் அளவு தொடர்பில் கவனமாக இருக்கவும்.