அதை உருவாக்குவோம்
1
ஒரு கிண்ணத்தில் பட்டர் மற்றும் சர்க்கரையை சேர்க்கவும்.
2
பட்டர் கலவை மென்மையாகும் வரை நன்கு அடிக்கவும்.
3
அதே நேரம் சிறிய அளவுகளில் MILKMAID சேர்த்து, கலவை நன்கு கலக்கும் வரை தொடர்ந்து அடிக்கவும்.
4
கலவையில் வெணிலாவை சேர்த்து நன்கு அடிக்கவும்.
5
உலர்ந்த பொருட்களான - கொகோ தூள், உப்பு, பேக்கிங் பவுடர் மற்றும் மாவு ஆகியவற்றை ஒரு தனி கிண்ணத்தில் சேர்த்திடவும்
6
பின், மா கலவை மற்றும் MILKMAID சேர்க்கவும்.
7
அனைத்து பொருட்களும் நன்கு கலக்கும் வரை மீண்டும் அடிக்கவும்.
8
NESCAFÉ ஐ சேர்த்து மேலும் சில நிமிடங்களுக்கு கலவையை அடிக்கவும்.
9
குக்கீ மாவை 20-25 நிமிடங்கள் குளிரூட்டவும்.
10
குளிர்ந்த குக்கீ மாவை எடுத்து சிறிய பகுதிகளாக பிரிக்கவும். பிரிக்கப்பட்ட பகுதிகளை சிறிய உருண்டைகளாக வடிவமைக்கவும்.
11
அவனை 180°C க்கு முன்கூட்டியே சூடாக்கவும்
12
இறுதியாக, குக்கீ மாவை உருண்டைகளை பேக்கிங் தட்டில் வைக்கவும். பேக்கிங் ட்ரேயில் வைக்கும் போது ஒவ்வொரு குக்கீயிற்கும் இடையில் போதுமான இடைவெளி இருப்பதை உறுதி செய்யவும்.
குக்கீகளை 180°C இல் 20 நிமிடங்கள் பொன்னிறமாகும் வரை பேக் செய்திடுங்கள்.