அதை உருவாக்குவோம்
நடுத்தர சோஸ்பான் பாத்திரத்தில் புளுபெரிஸ், சீனி மற்றும் லெமன் ஜுஸ் இட்டு நடுத்தர வெப்பத்தில் புளுபெரிகள் வெடித்து கலவை நன்றாக கொதிக்கும் வரை சமைக்கவும். சூட்டினைக் குறைக்கவும். 5 நிமிடங்களுக்கு அல்லது கலவை தடிப்பாக வரும் வரை தொடர்ச்சியாக கலக்கவும். சிறிய பாத்திரத்திலிட்டு ஆற விடவும்.
கிறீமை ஒரு பெரிய பாத்திரத்திலிட்டு எலக்றிக் மிக்ஸரில் உயர் வேகத்தில் தடிப்பான நுரைகள் தோன்றும் வரை அடிக்கவும். இன்னொரு பெரிய பாத்திரத்திலிட்டு கிறீம் சீசை மென்மையாக வரும் வரை அடிக்கவும். MILKMAID, வனிலா எசன்ஸ், லெமன் பீல் மற்றும் உப்பை நன்றாகக் கலக்கும் வரை அடிக்கவும். முழுமையாக கலக்கும் வரை விப்ட் கிறீமையும் சேர்க்கவும்.
1 /3 புளுபெரியை 9X5 அங். பாத்திரத்தில் பரவவும். தட்டொன்றிலுள்ள புளுபெரி கலவையில் அரைக் கரண்டி ஐஸ்கிறீமை இடவும். கத்தியின் நுனியினால் கலவையைக் கலக்கவும். ஒவ்வொரு லேயர்களிலும் அவ்வாறு செய்யவும். எஞ்சியுள்ள புளுபெரியை மேலே இட்டு சுழற்றவும். மூடிய பின் 6 மணித்தியாலங்கள் அல்லது கட்டியாகும் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். பின் பரிமாறவும்.
ஊட்டச்சத்து உண்மைகள்
பொற்றாசியம் போன்ற தாதுப்பொருட்கள், மற்றும் விட்டமின் C போன்ற விட்டமின்கள் நிறைந்ததாக புளுபெரி உள்ளது. அவற்றில் அதிகளவு நார்ச்சத்தும் உள்ளது. அவற்றில் கொலஸ்ரோல் குறைவு என்பதன் காரணமாக சிறந்த ஆரோக்கியமான இதயத்திற்கும் துணை புரிகின்றது.