அதை உருவாக்குவோம்
1
பாத்திரமொன்றில் 60ml சூடான நீரில் ஜெலட்டினைக் கலக்கவும். MILKMAID பால்மா மிகுதியான நீர், வனிலா மற்றும் கரைத்த ஜெலட்டினை, பரிய பாத்திரத்தில் இடவும். நன்றாக கலக்கவும். இறுகும் வரை பிறீஷரில் வைக்கவும்.
2
கலவை தடிப்பாகவும் கிறீமாகவும், வரும் வரை அடிக்கவும். பின் கலவையை இரண்டாகப் பிரிக்கவும். ஒரு அரைப் பாகத்துடன் விப்ட் கிறீம் மற்றும் பெரிப் பழங்களைச் சேர்க்கவவும். புடிங் பாத்திரத்தினுள் ஊற்றவும். இறுகும் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.
3
மிகுதியான கலவையுடன் கஜு நட்ஸ் மற்றும் அரைத்த குக்கிங் சொக்லேற்றையும் சேர்க்கவும். பெரி பழக் கலவை மீது ஊற்றவும். அதன் பின் கலவை இறுக்கமாக வரும் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.
4
விரும்பினால் மேலதிக பெரிப் பழங்கள் மற்றும் சொக்லேற் சுருள்களுடன் பரிமாறவும்.
ஊட்டச்சத்து உண்மைகள்
சிறந்த உடற்செயற்பாட்டை பேணுவதற்கு முக்கியமான விட்டமின்கள், தாதுப்பொருட்கள், மற்றும் antioxidants மூலங்கள் என்பன முந்திரியில் நிறைந்துள்ளன.