அதை உருவாக்குவோம்
1
அவண் தட்டை மத்திய நிலைக்கு கொண்டு வரவும். அவணை 350°F அளவு வெப்பமாகும் வரை முற்கூட்டியே சூடாக்கவும்.
2
7 அங். டார்ட் மீது பட்டரைத் தாராளமாகத் தடவுங்கள். மேலும் அமுக்கப்பட்ட செரிப் பழங்களை சமமாக இடமுள்ளவாறு தட்டொன்றில் ஒழுங்குபடுத்தவும்.
3
முட்டைகள், Milkmaid , பால், சீனி மற்றும் மாவை பிளண்டரில் அல்லது சிறிய புட் புரோஸசரில் சேர்க்கவும். வனிலா பீன்சை கரண்டியால் அதற்குள் போடவும். மென்மையாக வரும் வரை அல்லது கட்டிகள் கரையும் வரை கலக்கவும்.
4
செரிஸ் பழங்கள் மீது கலவையை மெதுவாக ஊற்றவும். செரிஸ் பழங்கள் ஒன்று சேராதவாறு கவனமாகப் பார்த்துக் கொள்ளவும்.
5
பேக்கிங் பேப்பர் ஒன்றின் மீது வைத்து, ஊதிப் பெருத்து பொன்னிறமாக வரும் வரை அதாவது ஏறக்குறைய 25-30 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்.
6
பவுடராக்கிய சீனியைத் தூவிய பின், துண்டுகளாக வெட்டி சூடாகப் பறிமாறவும்.
ஊட்டச்சத்து உண்மைகள்
நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கான நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கு அத்தியாவசியமான சக்தி மிக்க antioxidants மூலங்களை செரி கொண்டிருக்கின்றது.