அதை உருவாக்குவோம்
200°c/180°c வெப்பநிலையில் அவணை முன்னதாக வெப்பமேற்றிக் கொள்ளவும்.
மா, ஐசிங் சுகர் மற்றும் பட்டர் என்பவற்றை பாண் கிறம்ஸ் உடன் நன்றாகச் சேரும் வரை கலக்கவும். முட்டை மற்றும் நீரை சேர்த்து மேலும் கலக்கவும்.
எண்ணெய் பூசிய 9.5cm 3cm அளவுடைய நான்கு வட்ட வடிவ பை டின்களைத் தனித்தனியாக தயார் செய்யவும். 15cm அளவுடைய இரண்டு வட்டங்களை அமைக்க மேற்படி கலவையை வேறுவேறாக சுழற்றச் செய்து 2 பேக்கிங் தாள்களை வட்டமாக வெட்டிக் கொள்ளவும். பேஸ்ரி வட்டங்களை அச்சுக்களிலிட்டு ஓரங்களில் அழுத்தவும். மேலதிக பேஸ்ரித் துண்டுகளைக் கத்தரித்து விடவும். முள்ளுக் கரண்டியினால் அடிப்பகுதியை அழுத்தி 30 நிமிடங்களுக்கு மூடி குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். பின் இவற்றை 10 நிமிடங்களுக்கு பேக் செய்து ஆற விடவும்.
பெரிய சோஸ்பான் ஒன்றில் MILKMAID மற்றும் நீரை இட்டு நன்கு கலக்கவும். பெரிய பாத்திரமொன்றில் கோர்ண் பிளவர் முட்டை மஞ்சட்கரு மற்றும் வனிலாவைச் சேர்க்கவும். இதனை கலக்கிய வண்ணம் MILKMAID கலவையை மெதுவாக ஊற்றவும். கலவையை மீண்டும் சோஸ்பானிலிட்டு சாதாரண வெப்பத்தில் 8 நிமிடங்களுக்கு அல்லது தடிப்பாக வரும் வரை தொடர்ச்சியாக கலக்கியபடி சூடாக்கவும்.
பேஸ்ட்ரி டின்களில் ஊற்றிய பின் கறுவாத் தூளைத் தூவவும்.
1 மணித்தியாலத்திற்கு அல்லது இறுகி வரும் வரை குளிரூட்டியில் வைக்கவும். செரீஸ்களுடன் கூடிய டார்ட்களால் அலங்கரிக்கவும்.
ஊட்டச்சத்து உண்மைகள்
ஆரோக்கியமான, சமமான உணவுப் பழக்கத்திற்கு அத்தியாவசியமான பல விட்டமின்கள்கள் மற்றும் தாதுப்பொருட்களை முட்டை கொண்டிருக்கின்றது. புரோட்டினுக்கான சிறந்த மூலமாகவும் அவை விளங்குகின்றன.