நன்கு பதமான அமைப்புடனான வடிவம் வரும்வரை நீங்கள் இருமறை பீட் செய்து குளிரூட்ட வேண்டும். ஐஸ் க்றீமுக்கான அமைப்பு தயாரிக்கப்பட்ட பின் 8 மணித்தியாலங்கள் குளிர்ச்சாதனப் பெட்டியின் அதி குளிரூட்டியில் நன்கு உறையும் வரை வைத்திருக்கவும். பின்பு நன்கு மென்மையாகும் வரை பீட் செய்து இரண்டாவது முறையாகவும் 6 மணித்தியாலங்கள் குளிரூட்டியில் வைக்கவும். இதன் பின்பும் நன்கு செட் ஆகவில்லையென்றால் முழு இரவும் குளிர்ச்சாதனப் பெட்டியில் வைக்கலாம்.