அதை உருவாக்குவோம்
ஒட்டாத பேக்கிங் பேப்பரினால் சதுரமான கேக் பானின் அடித்தளம் மற்றும் பக்கத்தை மூடவும். அத்துடன் கேக் பானின் பக்கங்களில் மேலதிகமாக இருக்க விடவும்.
ஒரு பாத்திரத்தில் தேங்காயையும் சீனியையும் சேர்க்கவும். MILKMAID ஐ இட்டு கலக்கவும். இரண்டு பாத்திரங்களுக்கிடையில் பங்கிடவும். பாத்திரத்திற்குள் சிவப்பு உணவு கலரிங் சில துளிகளை சேர்த்து நன்றாக கலக்கவும். தயாரிக்கப்பட்ட பானுக்குள் அமிழ்த்தவும். எஞ்சியிருக்கும் பாகத்திற்குள் பச்சை நிற உணவு கலரிங் சில துளிகளைச் சேர்க்கவும். அடித்தளத்தின் மேல் அமிழ்த்தவும். மேற்புறத்தை மென்மையாக்கவும். பின் அதனை மூடி 1 மணித்தியாலத்திற்கு அல்லது இறுகி வரும் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.
கேக் பானுக்கு வெளியே தொங்கிக் கொண்டிருக்கும் பேக்கிங் பேப்பரைப் பிடித்து கேக் துண்டை வெளியே எடுக்கவும். கூரான கத்தியால் 32 துண்டுகள் வெட்டவும்.
ஊட்டச்சத்து உண்மைகள்
நார்ச்சத்து உணவு, மங்கனீஸ், செம்பு மற்றும் செலனியம் உள்ளடங்கலாக பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை கொண்டிருப்பதுடன், கொலஸ்ரோல் அல்லது மாறும் கொழுப்புகள் அற்றதாக காய்ந்த தேங்காய்ப்பூ உள்ளது.