அதை உருவாக்குவோம்
1
மென்மையான நுரை தோன்றும் வரை முட்டை வெள்ளைக் கருவை அடிக்கவும். படிப்படியாக சீனியைச் சேர்க்கவும். ஒவ்வொன்றையும் சேர்த்த பிறகு நன்றாக அடிக்கவும். ஐசிங் சுகர் மற்றும் கோர்ண் பிளவரைச் சேர்க்கவும். இறுதியாக ஆமண்ட் எசன்சை சேர்க்கவும். பேக்கிங் சீற்றில் விரிக்கப்பட்ட மினி கப் (2 அங்.) வடிவில் மெரிங்கை பைப் மூலம் செலுத்தவும். 130°c வெப்பத்தில் மெரிங்கு மொறமொறப்பாகும் வரை 1 மணித்தியாலத்திற்கு பேக் செய்து ஆற விடவும்.
2
MILKMAIDஐயும், நீரையும் நன்றாகக் கலக்கவும். நன்றாகச் சேரும் வரை கலக்கவும். பெரிய பாத்திரத்தில் கோர்ண் பிளவர், முட்டை மஞ்சள் கரு மற்றும் வனிலாவை இட்டு நன்கு கலக்கவும். கலக்கும் போதே MILKMAID கலவையை கஸ்டார்ட் கலவைக்குள் மெதுவாக ஊற்றவும்.
3
சோஸ்பானுக்குள் கலவையை இட்டு, நடுத்தர வெப்பத்தில் சமைக்கவும். தடிப்பாக வரும் வரை அடிக்கடி கலக்கவும். ஆற விடவும்.
4
பவ்லோவாக்குள் கஸ்டார்ட்டை பைப் மூலம் செலுத்தவும். பழங்களால் அலங்கரிக்கவும்.
ஊட்டச்சத்து உண்மைகள்
மாம்பழங்கள், ஸ்ரோபெர்ரிகள் போன்ற பழங்கள் விட்டமின் Cஇற்கான சிறந்த மூலமாகவும், உயர் நார்ச்சத்து கொண்டவையாகவும் விளங்குகின்றன.