அதை உருவாக்குவோம்
1
ஒரு பாத்திரத்திலிட்டு தயிர், MILKMAID மற்றும் மாம்பழக் கூழை மென்மையாக வரும் வரை நன்றாக அடிக்கவும். இன்னொரு பாத்திரத்தில், கிறீமை நன்றாக அடித்த பின் மேற்படி கலவையுடன் கலக்கவும். பின்பு குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.
2
தோடம்பழத் துண்டுகளின் மேல் பிறவுண் சீனி மற்றும் கறுவாத் தூளை தூவி குளிர்சாதனப் பெட்டியில் பரிமாறத் தயாராகும் வரை வைக்கவும்.
3
பரிமாறுவதற்கு முன் தோடம்பழத்தின் சில பகுதிகளை அலங்கரிப்பதற்காக அகற்றவவும். தோடம்பழத்திலிருந்து வெளியேறும் மேலதிக திரவத்தை வடிக்கவும். மாம்பழ சோசை சேர்க்கவும்.
4
12 கோப்பைகளில் இதனைப் பிரித்து அதன்மீது சோசை விட்டு பரிமாறவும். ஒதுக்கி வைத்திருந்த தோடம்பழத் துண்டுகளினால் அலங்கரிக்கவும்.
ஊட்டச்சத்து உண்மைகள்
மாம்பழத்தில் அதிகளவு நார்ச்சத்து உள்ளதுடன், விட்டமின் C மற்றும் விட்டமின் A என்பவற்றுக்கான சிறந்த மூலமாகும்.